Karampon St.Sebastian Church committee of Canada கோயில்  திருத்த வேலைகளை தற்போது ஆரம்பித்துள்ளார்கள். கனடாவில்  வசிக்கும் கரம்பொன் பங்கு மக்களின் பணஉதவியுடன் இந்த வேலைத்திட்ட்ங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான செலவுக்கான ஒருபகுதி ஏற்கனவே நேரடியாக  Karampon St. Sebastian Parish Building Fund account இற்கு கனடாவில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. மேலும் Uk, Australia , Norway , France USA  ஆகிய நாடுகளில் வசிக்கும் கரம்பொன் பங்கு மக்களும் இந்த கட்டிட நிவாரணத்துக்காக பணம் சேர்க்கும் முயட்சியில் இறங்கியுள்ளார்கள். அவர்களுக்கும் உங்கள் ஆதரவை வழங்கி இந்த முயட்சி நிறைவுபெற உதவுமாறு வாழ்த்துகிறோம் .நடைபெற்றுக்கொண்டிருக்கும் திருத்த வேலைகளின் படங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது நமது ஆலயம். இதை பேணி பாதுகாக்க வேண்டியது நமது அனைவரதும் கடமை. அது மட்டுமல்ல நம் அனைவரும் தங்களால் இயன்ற பண உதவியை செய்தால் இந்த திருத்த வேலைகளை வெகு விரைவாக செய்து முடிக்க இலகுவாக இருக்கும். இந்த வேலைத்திட்டத்தின் வரவு செலவுக்கான விபரங்கள் அனைத்தும் karampon Facebook Page மற்றும்  karampon.com/parish என்ற இணையதளத்திலும் அறிவிக்கப்படும். தொடர்புகளுக்கு   Karampon St.Sebastian Church committee of Canada  அங்கத்தவர்கள் ஒருவருடன் தொடர்பு கொள்ளவும்.