மரண அறித்தல்
அன்னையின் மடியில்: ஆண்டவன் அழைப்பில்:
26.09.1918 30.10.2011
திருமதி மேரி கிளமென்ரைன் புஸ்பம் அன்ரன் (புஸ்பம்)
கரம்பொன்னைப பிறப்பிடமாகவும், கனடாவில் வசித்து வந்தவருமாகிய
திருமதி மேரி கிளமென்ரைன் அன்ரன் (புஸ்பம்) 30.10.2011 ஞாயிற்றுக்கிழமை இறைபதம் சேர்ந்தார்.
அன்னார் கரம்பனைச் சேர்ந்த காலஞ் சென்ற திரு. திருமதி மனுவல்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்ற திரு.B.J அன்ரன் அவர்களின் அன்பு மனைவியும், திரு. யோசவ் நாயகத்தின் பாசமிகு சகோதரியும், பத்தாவத்தையைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு. திருமதி யோசவ் ஆகியோரின் அருமை மருமகளுமாவார்.
ஏஞ்சல் விமலா (டெயிலி) கனடா, யோசவ் மரியதாஸ் (சந்திரன்) சவுதி, அருட்சகோதரி டெலா றோஸ் இலங்கை, யோசவ் யேசுதாஸ் (ராசு) இலண்டன், சிசிலியா இலங்கை, சிஸ்ரர் சிறிலா (அன்னம்) இலங்கை, அமலி கனடா, யோசவ் தேவதாஸ் கனடா, யோசவ் நற்கருணைதாஸ் (ராஜன்) இலங்கை ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செபஸ்ரியன் (கனடா), மேரி ஸ்ரெலா (சவுதி), சாந்தி (இலண்டன்), மெல்வின் (இலங்கை), பிரிற்ரோ (கனடா), பப்ரிஸ்ரா (கனடா), சுகந்தி (இலங்கை) ஆகியோரின் அருமை மாமியாரும்,
வனிதா (கனடா) ஜெயந்தா (கனடா), ஜெனிரா (கலிபோனியா) அஞ்சலிற்ரா (அவுஸ்ரேலியா), காலஞ்சென்ற டிலான் (Dilan), டோறா (Dora) (லண்டன்), ஒனறீன் (Honorine) (லண்டன்), மகேஷா (இலங்கை), மனிஷா (ஒஸ்ரேலியா) இவன்கா (கனடா), லெவன்ரா (Lefanta). (கனடா), திமோத்தி (Timothy) (கனடா) ,ஜீவா (கனடா), மனோகரன் (ஐரோப்பா), பிரபாகினி (கனடா), கோபால் (கலிபோனியா), சைலு (ஒஸ்ரேலயா), றோயிஷ்ரன் (இலங்கை), வோறன் (ஒஸ்ரேலியா) ஆகியோரின் பாசமிகு பேத்தியுமாவார்.
றயன் (Ryan) (மொன்றியல்), டெறிக் (Derek) (மொன்றியல்), கிளன் (Glen) (மொன்றியல்), திவ்வியன் (கனடா), லற்றிஷா (Latisha) (கனடா), அபிகேல், (இலங்கை) அற்டாரா (Atara)(இலங்கை), வசந்த், (கலிபோனியா), பிரசாந்த், (ஒஸ்ரேலியா), ஆகியோரின் அன்புப் பூட்டியுமாவார்.
ஆன்னாரின் புகழ் உடல் 04.11.2011 வெள்ளிக்கிழமை 4 மணி தொடக்கடம் 9.00 மணிவரையும், சனிக்கிழமை 9.00 மணி தொடக்கம் 10 மணி வரையும் Highland Funeral Home இல் (3280 Sheppard Avenue East) பார்வைக்காக வைக்கப்பட்டு November 5th சனிக்கிழமை காலை 11-00 மணிக்கு Prince of Peace தேவாலயத்தில் (265 Alton Tower Circle) இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, பின்னர் Christ the King சேமக்காலையில் (Cemetery) நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புகளுக்கு: 416-292-9966 அமலி
416-568-2172 வோல்ரர்
647-271-3934 யோசப்
647-885-8253 தரன்
Wednesday, 02 November 2011 12:15
Mrs. Pushpam Anton
- Name: Mrs. Mary Clementine Pushpam Anton
- Place: Toronto Canada
- Date of Birth: 26-09-1918
- Called to Rest: 30-10-2011
Read 794 times


