கரம்பொன்னை பிறப்பிடமாக கொண்ட மரியாம்பிள்ளை இம்மனுவேல் பயஸ் அடிகளார் மார்கழி 4ம் திகதி இறையடி எய்தினார். அன்னார் காலம்சென்ற மரியாம்பிள்ளை முத்துராசா- சற்குணம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், பிலோமின், ஜோசப், செறின், காலம்சென்ற பேர்டினன்ட், பொஸ்கோ அடிகளார், மடோனா ஆகியோரின் பாசமிகு சகோதரரும் லலிதா, ஜெயசீலி, றீற்ரா, காலம்சென்ற இக்னேசியஸ், கொன்ஸ்ரன்ரைன் ஆகியோரின் மைத்துனருமாவார். அன்னாரின் பூதவுடல் மார்கழி 7ம் திகதி யாழ்பாணம் கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
மரியாம்பிள்ளை குடும்பத்தினர்



